வேட்பு மனுக்களை கையளித்த தமிழ் மக்கள் கூட்டணி
தமிழ் மக்கள் கூட்டணி யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திற்குரிய வேட்புமனுக்களை இன்றையதினம் கையளித்தனர்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக யாழ். மாநகர முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் தமிழ் மக்கள் கூட்டணி யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டத்திற்கான வேட்புமனுவை இன்று காலை 11.30 மணியளவில் யாழ். மாவட்டச் செயலகத்தில் தாக்கல் செய்தனர்.
களமிறங்கவுள்ள வேட்பாளர்கள்
தமிழ் மக்கள் கூட்டணி மான் சின்னத்தில் களமிறங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
வேட்புமனு தாக்கலுக்கு முன்னர் வேட்பாளர்கள் தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

அத்துடன் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சிதறு தேங்காய் அடித்து வழிபாடு நடத்தப்பட்டது.
விஸ்வலிங்கம் மணிவண்ணன், வரதராஜன் பார்த்தீபன், தவச்செல்வம் சிற்பரன், முருகானந்தம் யசிந்தன், கதிரேசன் சஜீதரன், பிரான்சிஸ் குலேந்திரன் செல்ரன், அருள்பரன் உமாகரன், நாவலன் கோகிலவாணி, மிதிலைச்செல்வி ஶ்ரீ பத்மநாதன் ஆகியோர் இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
மேலதிக தகவல்கள் - கஜிந்தன்
You may like this....



900 கடந்த இறப்பு எண்ணிக்கை... இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள் News Lankasri