பலமிழக்கும் தமிழரசுக் கட்சி! தேர்தல் களத்தில் இருந்து வெளியேறிய மற்றுமொரு முக்கியஸ்தர்
நடைபெற இருக்கும் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் வேட்பாளர் பட்டியலில் இருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உறுதி செய்யப்பட்டுள்ள வேட்பாளர்..
நடைபெற இருக்கும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் வன்னி மாவட்ட களத்தில் வேட்பாளராக மன்னார் தொகுதியில் சட்டத்தரணி செல்வராஜ் டினேசன் மாத்திரமே தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இரு வேட்பாளர்கள் தெரிவில் தொடர்ந்து இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. முன்னாள் எம்.பி சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆரம்பத்தில் தேர்தல் களத்திலிருந்து ஒதுங்குவதாக அறிவித்திருந்தார்.
விலகும் சார்ள்ஸ்
எனினும், பின்னர் ஆதரவாளர்களின் வற்புறுத்தல்களினால் எதிர்வரும் பொதுத் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதாக அறிவித்த நிலையில் மீண்டும் நேற்றைய தினம் (8) இந்த தேர்தல் களத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் மன்னாரில் இருந்து மேலும் இரு வேட்பாளர்களை தெரிவு செய்ய மன்னார் தமிழரசுக்கட்சி கிளை தொடர்ந்து பல்வேறு முயற்சிகளிலும் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
எனினும் பலர் தமிழரசுக் கட்யினால் வேட்பாளராக பரிந்துரைக்கப்பட்டுள்ள போதும், இதுவரை அவர்கள் தமது விருப்பத்தை தெரிவிக்கவில்லை என தெரிய வருகிறது.
இந்த நிலையில் வன்னித் தேர்தல் தொகுதியில் தமிழரசுக் கட்சியின் முடிவு இன்று இறுதி நிலைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam
