மைத்திரிபால உள்ளிட்ட சுதந்திரக் கட்சி தரப்புக்கு நீடிக்கப்பட்ட தடை உத்தரவு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர் மைத்திரிபால சிறிசேன உட்பட மகிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன மற்றும் துமிந்த திஸாநாயக்க ஆகியோருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை மேலும் நீடிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்குகள் விசாரணைக்காக இன்று (30) மீள அழைக்கப்பட்டதை அடுத்து கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதானவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அக்டோபர் 9ஆம் திகதி வரை அதற்கான தடை உத்தரவை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேன
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து தம்மை தன்னிச்சையாக நீக்குவதற்கு எடுத்த தீர்மானம் சட்டத்திற்கு முரணானது என மனுதாரர்களான லசந்த அழகியவண்ண, துமிந்த திஸாநாயக்க மற்றும் மகிந்த அமரவீர ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

அந்த தீர்மானங்களை செல்லுபடியாகாத தீர்மானத்தை கோரி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் அவர்கள் இந்த வழக்குகளை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri