கோதுமையின் விலை குறைகிறது! புதிய விலை தொடர்பான அறிவிப்பு
அடுத்த வாரம் முதல் கோதுமை மாவின் விலை குறைவடையக் கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.
சந்தையில் கோதுமை மாவின் விலை கடுமையான உயர்வினை எட்டியுள்ளதாலும், கோதுமை மா பற்றாக்குறையினாலும் பொதுமக்கள் மற்றும் பேக்கரி தொழிற்துறையுடன் ஈடுபடுவோர் கடுமையான பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர்.
குறைவடையும் விலை
இந்த நிலையில் முன்பதிவு செய்யப்பட்ட கோதுமை மா துறைமுகத்திற்கு வந்துள்ளதன் காரணமாக அடுத்த வாரம் முதல் கோதுமையின் விலை குறைவடையும் என இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
துருக்கி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து முன்பதிவு செய்யப்பட்ட கோதுமை மா கடந்த வாரம் நாட்டிற்கு வந்துள்ளது.
300 ரூபாவிற்கு குறையும்
மேலும் கடந்த மாதங்களில் கோதுமை மா இறக்குமதி நிறுவனங்கள் முன்பதிவு செய்யாமையினால், நாட்டில் கோதுமை மாவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 350 – 400 ரூபா வரை அதிகரித்தது.
எவ்வாறாயினும், கொழும்பு 4ஆம் குறுக்குத் தெரு இறக்குமதியாளர்கள் கோதுமை மாவை முன்பதிவு செய்து கையிருப்பு பெறுவதால் கிலோ ஒன்றின் விலை 300 ரூபாவிற்கும் குறைவடையும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

குக் வித் கோமாளி சீசன் 6 ரசிகர்களுக்கு வந்த ஒரு தகவல்.. திடீரென நடந்துள்ள மாற்றம், என்ன தெரியுமா? Cineulagam

இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ள சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பிரபலம்.. எங்கெல்லாம் சென்றுள்ளார் பாருங்க Cineulagam
