நாட்டில் கோதுமை மாவுக்குத் தட்டுப்பாடு
நாட்டில் கடுமையான கோதுமை மா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேக்கரி உற்பத்திப் பொருட்களுக்கு கோதுமை மா பயன்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் தற்போது கோதுமை மாவுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகின்றது.
எரிபொருள் நெருக்கடி..

எரிபொருள் நெருக்கடியால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.
திருகோணமலையிலிருந்து கொழும்புக்கு 50 கிலோகிராம் கோதுமை மா மூடையை கொண்டு செல்லும் போது ஒரு மூடைக்கு 300 ரூபா மேலதிகமாக அறவிடப்படுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.
திருகோணமலையில் இருந்து மருதானைக்கு கடந்த காலங்களில் தொடருந்தில் கோதுமை மா கொண்டு செல்லப்பட்டதாகவும், தற்போது தொடருந்தில் கோதுமை மா கொண்டு செல்வது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
சர்வதேச அரசியலில் ஆக்கிரமிப்பு யுத்தங்கள் தொடர் கதைதான்... 59 நிமிடங்கள் முன்
விஜய் டிவியின் சின்ன மருமகள் சீரியல் ஒளிபரப்பாகும் நேரம் மாற்றம்... இனி எப்போது தெரியுமா? Cineulagam
ரஞ்சியில் அர்ஜுன் டெண்டுல்கர் 4 ஓட்டங்களில் அவுட்: 6 விக்கெட்டுகளை அள்ளிய வீரர்..சுருண்ட கோவா News Lankasri