பெரும் முதலாளிகள் கடலட்டை வளர்ப்பு தொழிலில் ஈடுபடுவதால் பாதிக்கப்படும் சிறு கடற்றொழிலாளர்கள்..
பெரும் முதலாளிகள் கடலட்டை வளர்ப்பு தொழிலில் ஈடுபடுவதால் சிறு கடற்றொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக வடக்கு மாகாண மீனவ பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
அவர் நேற்று(28) பிற்பகல் தனது இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்,
கடல் வளம் அழிப்பு
அவர் மேலும் தெரிவித்ததாவது, உள்ளூர் இழுவைப் படகினால் கடல் வளம் அழிக்கப்படுகின்றமை, கடல் அட்டை வளர்ப்பினால் சிறு கடற்றொழிலாளர்கள் பாதிப்பு, உட்பட பல்வேறு விடயங்களை வடக்கு கடற்றொழிலாளர்கள் பிரதிநிதிகள் மீன்பிடி அமைச்சின் பணிப்பாளர் நாயகத்தை சந்தித்து முறையீடு செய்துள்ளோம்.
நாங்கள் கடல் வளத்தை பாதுகாப்பது தொடர்பாக அவரிடம் தெரிவித்தபோது அவர் உள்ளூர் இழுவைமடி படகுகள் இறால் பிடி தொழிலில் ஈடுபடுவதாக குறிப்பிட்டார்.

நாங்கள் கடல் வளத்தை பாதுகாப்பது தொடர்பில் பேசும் போது அவர் கடல் வளத்தை அழிக்கின்ற தொழிலை ஆதரிப்பதாக்க பேசுகின்றார்.
தென்பகுதியில் வத்தள குண்டு பகுதியில் உள்ளூர் இழுவை மடி படகு தொழிலை தடை செய்த பின்னர் அவர்கள் குறைந்த மண்ணெண்ணெய் செலவில் அதிகமான வருவாயை ஈட்டி வருகின்றது.
இழுவை மடிபடகு
அதே போன்று வடக்கிலும் உள்ளூர் இழுவை மடி படகினை உரியவர்கள் தடை செய்ய வேண்டும்.
மணல்காடு முதல் முல்லைத்தீவு நாயாறு வரை வலை பாவித்துத்தான் இறால் பிடியில் ஈடுபடுகின்றனர். கடல் அட்டை வளர்ப்பு பண்ணை பல ஏக்கர் கணக்கில் ஐயர், வைத்தியவர், பொறியியலாளர்கள் போன்ற பெரும் முதலாளிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் மீன் உற்பத்தியிடங்கள் அழிக்கப்பட்டு சிறு கடற்றொழிலாளர்களின் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதே போன்றுதால் கடலில் உள்ளூர் இழுவை மடி படகுகளாலும் இவ்வாறு மீன் பெருக்கிடங்கள் அழிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் தாம் உயர்மட்ட சந்திப்பு ஒன்றினை கொழும்பில் நடாத்தி நடவடிக்கை எடுப்பதாகவும், மண்ணெண்ணெய் மானியம் வழங்கலில் கடற்றொழிலாளர்கள் பலர் பாதிக்கப்படுவதாகவும் இது தொடர்பாகவும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பணிப்பாளரிடம் முறையிட்டதாகவும் தெரிவித்தார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத் திருத்தத்தின் மூலம் இராணுவத்துக்குப் பொலிஸாரின் அதிகாரங்கள்! மொட்டு தரப்பு கடும் கண்டனம்
ஜெயிலர் 2 பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற இத்தனை கோடி வசூல் வேண்டுமா.. மிகப்பெரிய இலக்கு! சாதிப்பாரா ரஜினிகாந்த் Cineulagam
அட்டகத்தி தினேஷின் காதலி இவர்தானா? ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய பிரபல தொகுப்பாளினியின் பதிவு! Manithan
இனி நாங்கதான் நார்மல்.. எல்லாரும் தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க: டோரதி சர்ச்சைக்கு கார்த்திக் சுப்புராஜ் பதில் Cineulagam