அமைச்சரவையில் கடும் வாக்குவாதம் - ராஜினாமா செய்ய தயாராகும் அமைச்சர்கள்
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி முற்றுப்புள்ளி இன்றி தொடர்ந்த வண்ணமே உள்ளது.
இந்நி்லையில் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் அண்மையைில் பதவியேற்ற அமைச்சரவை மீண்டும் கலைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சமகால அமைச்சரவையிலுள்ள அமைச்சர்கள் பதவி விலகுவது குறித்து இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.
இதன்போது கடும் கோபம் அடைந்த ஜனாதிபதிக்கும் அமைச்சர்களுக்கும் இடையில் கடும்வாக்குவாதம் இடம்பெற்றதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விசேட அமைச்சரவை கூட்டத்திற்கு இன்று ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தார். அதற்கமைய இன்று மாலை 5.30இற்கு அமைச்சரவை கூட்டம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, நேற்றையதினம் பிரதி சபாநாயகராக பதவியேற்ற ரஞ்சித் சியாம்பலப்பிட்டிய இன்றையதினம் தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
You My Like This Video