எவரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டாம்: ரணில் விக்ரமசிங்க

Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis Sri Lanka Sri Lankan political crisis Economy of Sri Lanka
By Rakesh Dec 06, 2022 06:40 PM GMT
Report

"உலகின் வளர்ந்த நாடுகளுடன் இணைந்து இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே தனது நோக்கம் எனவும், நாடு நிச்சயமாக பொருளாதார சுபீட்சத்தை நோக்கி நகரும் எனவே  தாய் நாட்டை விட்டு யாரும் வெளியேறத் தேவையில்லை" என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் தொடர்பில் இளைஞர்களுடன் நடந்த இணையத்தள உரையாடலில் கருத்துத் தெரிவிக்கும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நாட்டை விட்டு வெளியேறும் இளைஞர்கள்  

“தமது நாட்டில் தமக்கான உலகத்தை உருவாக்குவது இளைஞர்களின் பொறுப்பாகும் என்றும், அதுவே உண்மையான திறமை” என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது, 

"2025 ஆம் ஆண்டளவில் வளமான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்துக்கு இளைஞர்கள் பங்களிக்க வாய்ப்பு இருக்கின்றது.

எவரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டாம்: ரணில் விக்ரமசிங்க | Sri Lanka Economic Crisis Ranil Wickremesinghe

அன்று ஆசியாவில் ஜப்பானுக்கு அடுத்தபடியாக இலங்கை இருந்தது. ஆனால், இன்று நாட்டின் பொருளாதாரம் வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இன்றைய இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போக்கு அதிகரித்துள்ளது.

தற்போதுள்ள அரசமைப்பில் அவர்கள் மகிழ்ச்சியடையாததே இதற்குக் காரணம். இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி நாட்டுக்குப் பொருத்தமான பொருளாதார அமைப்பை விரைவாக அமைக்க வேண்டும்.

இடைக்கால வரவு - செலவுத் திட்டம்

கடந்த ஓகஸ்ட் மாதம் கொண்டுவரப்பட்ட இடைக்கால வரவு - செலவுத் திட்டத்தின் மூலம் நாட்டின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை ஒரு குறிப்பிட்ட மட்டத்துக்குக் கொண்டு வர முடிந்தது. அந்த ஸ்திரத்தன்மையின் அடிப்படையில் புதிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் பயணம் இவ்வருட வரவு - செலவுத் திட்டத்துடன் ஆரம்பிக்கும்" - என்றார்.

பொதுச்செலவு முகாமைத்துவம் தொடர்பான விசாரணைக்குப் பதிலளித்த ஜனாதிபதி, "புதிய நிதி கண்காணிப்பு குழுக்களை நியமிப்பதற்கும் நாடாளுமன்றத்தில் தற்போதுள்ள குழுக்களைப் பலப்படுத்துவதற்கும் இவ்வருட வரவு - செலவுத் திட்டத்தில் முன்மொழிவுகள் உள்ளன.

இந்த நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் நாடாளுமன்ற வரவு - செலவுத் திட்ட அலுவலகம் ஒன்றை நிறுவுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடி

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி ஒரேயடியாக ஏற்படவில்லை. நாடாளுமன்றத்தில் பல விவாதங்கள் இடம்பெற்ற போதிலும் அவ்வாறானதொரு பொருளாதார நெருக்கடி குறித்த அறிக்கையை எவரும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை.

அரச சேவை தொடர்பான நிர்வாகங்களில் கடந்த காலங்களில் தேவையற்ற வகையில் அரச சேவைகளை நிரப்பியமையே இன்று நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிக்குக் காரணமாகியுள்ளது.

எவரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டாம்: ரணில் விக்ரமசிங்க | Sri Lanka Economic Crisis Ranil Wickremesinghe

நாடு பொருளாதார அபிவிருத்தியை நோக்கி நகர்ந்தாலும் 2035 ஆம் ஆண்டளவில் அரச சேவையில் இருந்து ஓய்வு பெறுபவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும். அதனால் ஓய்வூதியம் வழங்குவதில் பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுக்க நேரிடும்" என்றார்.

இலங்கை டெலிகொம், ஹில்டன் போன்ற அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த ஜனாதிபதி, "நாணய இழப்பு மற்றும் வெளிநாட்டு கையிருப்பு காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்காக இலாபம் ஈட்டாத அரசு நிறுவனங்களைத் தனியார் மயப்படுத்தி, அதன் மூலம் ரூபாயை வலுப்படுத்த வேண்டும்" என்றார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் மண்டைதீவு 5ம் வட்டாரம், Jaffna, பரிஸ், France

04 Jun, 2024
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கனகாம்பிகைக்குளம்

25 Jun, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

சுன்னாகம், சுன்னாகம் கிழக்கு

07 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, அளவெட்டி தெற்கு

11 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை

23 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US