நீதிபதிகள் விவகாரத்தால் தூக்கத்தை இழந்த மகிந்த குடும்பம்..!
இலங்கையில் தற்போது நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லை விடயம் பேசுபொருளாகியுள்ள நிலையில், ராஜபக்ச தரப்புக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கை என்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
இந்தநிலையில், தற்போதைய உச்சநீதிமன்றத்தில் இன்னும் கோட்டாபய ராஜபக்ச நியமித்த நீதிபதிகள் இருப்பதால், வயது நீட்டிப்பு மூலம் அரசியல் பழிவாங்கல் நடக்கும் என்ற வாதத்திற்கு போதிய ஆதாரம் இல்லை என்று அரசியல் ஆய்வாளர் நேரு. குணரட்னம் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், உச்சநீதிமன்றத்தின் தற்போதைய நீதிபதிகளில் 7 பேரை கோட்டாபய ராஜபக்சவும், 5 பேரை அநுர குமார திஸாநாயக்கவும் நியமித்துள்ளனர்.
நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளில் பெரும்பாலானவை நாமல் ராஜபக்ச குடும்பத்தினர் அல்லது அவர்களுடன் தொடர்புடையவர்களைச் சார்ந்தவை என்பதால், இந்த விவகாரம் அரசியல் ரீதியாக பேசப்படுகிறது.
இலங்கையில் 11 லட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் இருப்பது நீதித்துறையின் பெரும் சவாலாக உள்ளது. ஓய்வு வயதை நீட்டிப்பதால் மட்டும் இந்தச் சிக்கல் தீர்ந்துவிடாது; நிர்வாக மட்டத்திலிருந்தே நீதித்துறையைச் சீரமைக்க வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி...
100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri