வரி பரிசோதகரை 4 சரீரப் பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவு
வடமராட்சி - தெற்கு, மேற்கு பிரதேச சபையில் சபை உறுப்பினர்களை வெளியேறுமாறு கூறிய வருமான வரி பரிசோதகருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில் வரி பரிசோதகர் தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான 4 சரீரப்பிணையில் செல்வதற்கு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சபை உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்றைய தினம்(28.07.2026) இந்த உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவு
இவர் கடந்த மாதம் சபை உறுப்பினர்கள் அமர்விற்காக சென்று மண்டபத்தில் அமர்ந்திருந்த போது அவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டு அவர்களை வெளியேறுமாறு கூறி உறுப்பினர்களை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளார்.
இதனையடுத்து சபை உறுப்பினர்களால் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாக இன்றைய தினம் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே நீதிமன்றம் தலா ஒரு இலட்சம் ரூபா பெருமதியான 4 சரீர பிணையில் செல்வதற்கு உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை அவரை பிணை எடுப்பதற்காக 4 வடமராட்சி - தெற்கு, மேற்கு பிரதேச சபை உத்தியோகாத்தர்களும் கடமையிலிருந்தாவாறே நீதிமன்றிற்கு சென்றுள்ளாதாகவும், இதனான் அவர்கள் தமது கடமைகளை துஸ்பிரயோகம் செய்துள்ளதாகவும் சபை உறுப்பினர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
உத்திரம் நட்சத்திரத்தில் நுழையும் சுக்கிரன்: இந்த 4 ராசிகளுக்கு சவாலான காலமாக இருக்கும் ஜாக்கிரதை! Manithan
ஒரே சீரியலில் நடித்து காதலித்து திருமணம் செய்துகொண்ட 5 ஜோடிகள்.. யார்யாரெல்லாம் என்று பாருங்க Cineulagam
ஆடி பௌர்ணமியில் உருவாகும் அரிய கேந்திர திருஷ்டி யோகம்: இந்த ராசிகளிளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan