இறக்குமதி தடை நீக்கம் தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட தகவல்
அத்தியாவசியமற்ற 305 பொருட்களின் இறக்குமதியை தற்காலிகமாக இடைநிறுத்துவது இந்த நேரத்தில் அவசியமான நடவடிக்கை என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் சூழ்நிலைக்கு தீர்வு கிடைத்தவுடன், கட்டுப்பாடுகள் முறையாக நீக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்டுப்பாடுகள் நீக்கப்படும்
“இந்த நேரத்தில், ஒரு நாடாக நாம் தீர்மானிக்க வேண்டும். வரையறுக்கப்பட்ட அந்நியச் செலாவணி எதற்காகப் பயன்படுத்தப்பட வேண்டும் என தீர்மானிக்க வேண்டும்.
எண்ணெய், மருந்து, எரிவாயு கொண்டு வருவதாக அல்லது கையடக்க தொலைபேசி, கார், தொலைக்காட்சி கொண்டு வர வேண்டுமா என சிந்திக்க வேண்டும்.
அத்தியாவசியமற்றவை தடை
அத்தியாவசிய விடயங்களுக்கு அந்தப் பணம் பயன்படுத்தப்பட்டால், இது போன்ற சூழ்நிலையில் மக்களுக்கு பெரும் வசதியாக இருக்கும். அதனால்தான் அத்தியாவசியமற்றவை தடை செய்யப்பட்டன.
இவை தற்காலிகமான விடயங்கள். சில தொழில்கள் பாதிக்கப்படும் என்பதை அறியாமல் இது செய்யப்படவில்லை. ஆனால் இந்த கட்டத்தில் முக்கியமான விடயம், வரையறுக்கப்பட்ட வளங்களை மிகவும் திறமையான முறையில் பயன்படுத்துவதாகும்.
இந்த நிலைமை தீர்க்கப்பட்டவுடன், கட்டுப்பாடுகளை முறையாக அகற்ற முடியும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


மீண்டும் பதின்மூன்றா....! 1 நாள் முன்

எல்லையில் குவிக்கப்படும் 5,00,000 ரஷ்ய வீரர்கள்: தாக்குதல் பகுதிகள் இதுவாக இருக்கும் என அமைச்சர் தகவல் News Lankasri

இயக்குனர் அட்லீயின் அம்மா, அப்பாவை பார்த்துள்ளீர்களா?- பிரபலத்துடன் அவர்கள் எடுத்த ஸ்பெஷல் போட்டோ Cineulagam

பிரான்ஸ் உணவகங்களில் பீட்சா தயாரித்துவந்த நபர் கைது: தெரியவந்துள்ள அதிரவைக்கும் பின்னணி News Lankasri
