இலங்கையை விட்டு வெளியேறும் தொழில் வல்லுநர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2022 ஆம் ஆண்டு வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறிய இலங்கையர்களின் எண்ணிக்கை 37% அதிகரித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
கடந்த 2015ஆம் ஆண்டு முதல் வருடாந்தம் வெளிநாட்டு வேலைக்குச் சென்றவர்களின் எண்ணிக்கை சராசரியாக 226,000 மாத்திரமாகும். ஆனால் 2022ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 311000 வரை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொழிலாளர்களின் எண்ணிக்கை
வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறியவர்களில் 87% பேர் சில தொழில் நிபுணத்துவம் கொண்ட தொழில் வல்லுநர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்புடன் ஒப்பிடுகையில், அவர்கள் இந்த நாட்டிற்கு மாதந்தோறும்அனுப்பும் வருமானம் 500 மில்லியன் டொலர்கள் என்ற வரம்பை எட்டியுள்ளதென குறிப்பிடப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |