வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
வீட்டு வேலைகளுக்காக அனுப்பப்படும் பெண்களுக்காக 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி முதல் மூன்றாம் நிலை நிபுணத்துவ சான்றிதழ் கட்டாயமாக்கப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இதற்கான கற்கை நெறிகளை முன்னெடுத்துச் செல்வதற்கு அரச மற்றும் தனியார் துறையினருக்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாக பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனரத் கூறியுள்ளார்.

கட்டாயமாக்கப்படும் சான்றிதழ்
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யப்படும் போது இந்த சான்றிதழைப் பெற்றுக்கொள்வது கட்டாயமாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நிபுணத்துவம் மற்றும் திறமையுடைய பெண்களை இந்த வேலைவாய்ப்புக்காக அனுப்புவதே இதன் நோக்கம் என்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனரத் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க இந்தியா-இஸ்ரேல் ரகசிய திட்டம்: CIA அதிகாரி வெளியிட்ட தகவல் News Lankasri