இலங்கை முகங்கொடுத்துள்ள ஆபத்தான நிலை - மக்களுக்கு மறைக்கப்படும் பக்கங்கள்
பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபட அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தாலும், இலங்கை மக்கள் பொருளாதாரத்தில் உண்மையான முன்னேற்றத்தை அனுபவிப்பதற்கு இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் ஆகும் என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை கொள்கை ஆய்வுகள் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் மேக்ரோ பொருளாதாரக் கொள்கை ஆராய்ச்சியின் தலைவருமான கலாநிதி துஷ்னி வீரகோன் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
East Asia Forum இணையத்தளத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வருமான இழப்பும், அதிக வரி விதிப்பும் மக்களை வெளிநாடுகளுக்குச் செல்லும் நிலைக்குத் தள்ளப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடன் நெருக்கடியானது இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்தின் பல வருடங்களை பின்னுக்குத் தள்ளியுள்ளது.
இந்த நிலையில், வேதனைக்குரிய சீர்திருத்தங்கள் நடைபெறுவதற்கு மக்கள் காத்திருக்க போதுமான பொறுமை இருப்பதாக மாத்திரம் அரசாங்கம் நம்புகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுடன், அந்த ஆண்டு இலங்கைக்கு முக்கியமான ஆண்டாக அமையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையில், அரசியல் நிச்சயமற்ற தன்மையால் பொருளாதார முடிவுகளை எடுப்பதில் தாமதம் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்து, முன்கூட்டியே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு மத்தியில் எழுந்துள்ள பொதுமக்களின் அதிருப்தி, வலிமையான மற்றும் அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவர்களின் திறமையை சோதிக்கும் வகையில் அமைந்திருப்பதாக அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
2022 ஆம் ஆண்டில் அதிக வாழ்க்கைச் செலவு காரணமாக உணவுப் பொருட்களின் விலை உயர்வைக் கொண்ட முதல் ஐந்து நாடுகளில் இலங்கையும் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்படக்கூடிய மக்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் துஷ்னி வீரகோன் குறிப்பிட்டுள்ளார். வேலைகள் மற்றும் வருமான இழப்பு, அதிகரித்துவரும் வறுமையுடன், நீண்ட மந்தநிலைக்கு நாடு இறங்குவதைக் குறிக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
2022 ஆம் ஆண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியானது கிட்டத்தட்ட 9 சதவிகிதம் சுருங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது, மேலும் சமீபத்திய மதிப்பீடுகளின்படி, 2023 ஆம் ஆண்டில் பொருளாதாரம் 3-4 சதவிகிதம் சுருங்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தால் பெறப்படவுள்ள 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதி வரையறுக்கப்பட்ட பணப்புழக்கத்தை வழங்குவதாகவும், கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை முன்கூட்டியே முடிப்பதே இலங்கைக்கான சிறந்த நம்பிக்கை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் ராணுவ தளங்களை தாக்கிய இந்திய விமானப்படை: BrahMos பயன்படுத்தப்பட்டிருக்க வாய்ப்பு News Lankasri

குக் வித் கோமாளி சீசன் 6 ரசிகர்களுக்கு வந்த ஒரு தகவல்.. திடீரென நடந்துள்ள மாற்றம், என்ன தெரியுமா? Cineulagam
