உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி
கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்டவற்றை இலக்கு வைத்து குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
நாட்டின் 3 தேவாலயங்கள், கொழும்பின் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் என 7 இடங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களில் 269 உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. சிலர் காயமடைந்து அங்கவீனர்களாகினர்.
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல் இடம்பெற்று 7ஆண்டுகள் நிறைவுபெறுவதினை முன்னிட்டு, குண்டு வெடிப்புகளில் சிக்கி உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து பல பபுகிகளில் அஞ்சலி நினைவு நிகழ்வுகள் நேற்று (21) முன்னெடுக்கப்பட்டிருந்தது.
கல்முனை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நினைவேந்தல் நிகழ்வு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கல்முனையில் நடைபெற்றுள்ளது.
இதன்போது ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
இதன்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குள்ளான சீயோன் தேவாலய தாக்குதலில் உயிரிழந்த சிறுவர்கள் நினைவு கூரப்பட்டு மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன், படுகொலை செய்யப்பட்டவர்களின் ஆத்ம,சாந்திக்கான பிரார்த்தனையும் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது இராணுவத்தினர்,பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri