பல்லேகம ஹேமரத்ன தேரர் வழக்கு! திரட்டப்படும் தொலைபேசி ஆதாரங்கள்
அனுராதபுரத்தின் முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தின தேரர் மீதான பாலியல் துர்நடத்தை தொடர்பான வழக்கின் முக்கிய ஆதாரமான முதலாவது டிஎன்ஏ அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது அறிக்கை விரைவில் எதிர்பார்க்கப்படுவதாகவும், அதுவே வழக்கின் தீர்ப்பில் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணைகளை சட்டமாதிபர் திணைக்களம் தற்போது நேரடியாக கண்காணித்து வருவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது பாதிக்கப்பட்ட சிறுமியின் பாதுகாப்பு கருதி, அவர் தங்கியிருக்கும் இடத்தைப் பகிரங்கப்படுத்த வேண்டாம் என்று நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், ஓகஸ்ட் 21, 2026 அன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தின தேரர் மீது சிறுமியை பாலியல் துர்நடத்தைக்குட்படுத்தியதாக தண்டனை சட்டத்தின் கீழ் பாரதூரமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் மீது மனிதக் கடத்தல் மற்றும் குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
விசாரணையின் ஒரு பகுதியாக சம்பந்தப்பட்டவர்களின் தொலைபேசி பகுப்பாய்வு (Phone analysis) அறிக்கைகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை இந்த வழக்கை உன்னிப்பாக கவனித்து வருகின்றது.
வழக்கு விசாரணையின் போது அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தின தேரர் வந்த விதம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பான விமர்சனங்களும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது.
இந்த விடயங்களை விரிவாக எடுத்து வருகின்றது Newsinsighttamil நிகழ்ச்சி..
சூட்கேஸில் இருந்தது மனித சடலம் அல்ல: உயர் ரக செக்ஸ் பொம்மை: அவுஸ்திரேலிய பொலிஸார் விளக்கம் News Lankasri