ஊழல் மற்றும் மோசடி வழக்குகளில் அதிரடி காட்டும் அரசாங்கம் ..!
தற்போதைய அரசாங்கம் ஒரு கொள்கை பிடிப்புள்ள கட்சியினுடைய நேரடி முகாமைத்துவத்தின் கீழ் இயங்குவதாகவும், இது கடந்த கால அரசாங்கங்களில் இல்லாத ஒரு புதிய அனுபவம் என்று ஊடகவியலாளர் மற்றும் ஆய்வாளர் என். சரவணன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்டார்.
ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிரான அதிரடி கைதுகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள், மக்களின் ஆணையை நிறைவேற்றும் விதமாகவே முன்னெடுக்கப்படுவதாகவும், இதற்குப் பொறுமை தேவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார குறியீடுகளில் முன்னேற்றம் தெரிந்தாலும், மக்களின் வாழ்க்கைச் சுமை இன்னும் குறையவில்லை என்றும் சுட்டிகாட்டியுள்ளார்.
இருந்தபோதிலும், நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டு வருவது ஒரு பெரிய முன்னேற்றம் எனத் தெரிவித்துள்ளார்.
இயற்கை அனர்த்தங்கள் மற்றும் அரசியல் நெருக்கடிகளால் மலையக மக்கள் மற்றும் விளிம்பு நிலையில் உள்ள தமிழர்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும் சுட்டிகாட்டியுள்ளார்.
மலையக மக்கள் தங்கள் அடையாளத்தைத் தொடர்ந்து பாதுகாப்பதன் அவசியத்தையும், அரசியல் ரீதியாக அவர்கள் சிறுபான்மையாகச் சுருங்கி வருவதால் ஏற்படப்போகும் சவால்களை எதிர்கொள்ள புதிய முன்னெடுப்புகள் தேவை என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்தவிடயங்கள் தொடர்பிலான விரிவான விளக்கங்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க..