வெனிசுலாவில் பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- உயிரிழப்பு 589-ஆக உயர்வு
வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 589ஆக உயிர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இந்திய நேரப்படி நேற்று(25.06.2026) அதிகாலை 3 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 என இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளது.
இதன்போது, ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்திருக்க வாய்ப்பு உள்ளதாக அச்சம் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், வெனிசுலா நிலநடுக்கங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 589 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழப்பு 2980-ஆக உயர்வு
அத்துடன், 2980-க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளதாக வெனிசுலாவின் இடைக்கால டெல்சி ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் அவசரநிலை பிறப்பிக்கப்படுவதாக அறிவித்த இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ், பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன.
மக்கள் அனைவரும் விழிப்புடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டும் என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், இடிந்த கட்டிடங்களில் மீட்புப் படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.