இலங்கையின் கடன் மறுசீரமைப்பு விவகாரம்: நம்பிக்கை வெளியிட்டுள்ள பிரான்ஸ்
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறையானது மிக விரைவில் முடிவுக்கு வரும் என இலங்கைக்கான பிரான்ஸ் (France) தூதுவர் ஜீன் பிரான்சுவா பேக்டெட் (Jean François Pactet) நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இலங்கை அதிகாரிகளுடன் கொழும்பில் இடம்பெற்ற வட்டமேசை கலந்துரையாடல் ஒன்றில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்ட விடயம் தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"பிரான்ஸுடன் இந்தியா (India) மற்றும் ஜப்பான் (Japan) ஆகிய நாடுகள் இணைந்து, அதிகாரப்பூர்வ கடன் குழு ஒன்றினை (OCC) அமைத்துள்ளன.
கடன் வழங்குநர்
ஆனால், சீனா (China) அந்த குழுவில் உள்ளபோதும், வெறும் பார்வையாளராகவே செயற்படுகிறது.
இந்தநிலையிலேயே, இருதரப்பு கடன் வழங்குநராகவும் கடன் மறுசீரமைப்பு தொடர்பாகவும் இலங்கையுடன் தனியான செயற்றிட்டங்களை கையாள்கிறது.
எனவே, செலுத்த வேண்டிய கடன்களின் அளவைக் குறைத்தல், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பணம் செலுத்துவதை ஒத்திவைத்தல் மற்றும் வட்டி குறைப்பு தொடர்பில் பாரிஸ் கிளப்பின் செயலாளர் என்ற முறையில் இந்நேரத்தில் அத்தகைய தகவல்களை பகிர்ந்து கொள்ள முடியாது” என சுட்டிக்காட்டியுள்ளார்.
You may like this,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan
