யாழில் இரு சிறுமிகளின் மோசமான நடத்தை: ஐவர் விளக்கமறியலில்
இலங்கையில் கடந்த வாரத்தில் மாத்திரம் பல குற்றச்செயல்கள் பதிவாகியுள்ளது.
இதில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகங்கள் அடங்கும்.
யாழில் 17 வயது சிறுமிகள் இருவரை கடத்திச் சென்று தகாத உறவு கொண்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் ஐவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அத்துடன், வீட்டைவிட்டு வெளியேறி துர்நடத்தையில் ஈடுபட்ட சிறுமிகள் இருவரையும் விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.
முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குமுழமுனை பிரதேசத்தில் 17 அகவையுடைய பாடசாலை மாணவி ஒருவர் வெள்ளை நிற காரில் வந்த கும்பலினால் கடத்தி செல்லப்பட்டுள்ளார். இது வரை மாணவி தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை முஸ்லிம் பெண்கள் அணியும் அபாயாவை அணிந்துகொண்டு, காதலியை உலவு பார்க்கும் மோசமான செயலில் ஈடுபட்ட முஸ்லிம் இளைஞன், ஒருவரும் காலி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் வவுனியா தேக்கவத்தை பகுதியில் விடுதி ஒன்று பொலிசாரால் முற்றுகையிடப்பட்டதுடன், இரு பெண்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டதுடன், விடுதியில் இருந்து ரி 56 ரக 30 தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன.
இவை போன்று இந்த வாரத்தில் இடம்பெற்ற, குற்றச் செயல்கள் அதனுடன் தொடர்புடைய விசாரணைகள், கைதுகள், நீதிமன்ற உத்தரவுகள் உள்ளிட்ட தகவல்களை தொகுத்து வழங்கும் குற்றப் பார்வை இதோ.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri