தமிழர் பகுதியில் பாடசாலை மாணவி வெள்ளை காரில் கடத்தல்! பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குமுழமுனை பிரதேசத்தில் 17 அகவையுடைய பாடசாலை மாணவி ஒருவர் வெள்ளை நிற காரில் வந்த கும்பலினால் கடத்தி செல்லப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குமுழமுனை தண்ணீரூற்று வீதியில் கடந்த 17.08.2022 அன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
NP CAH 6552 என்ற இலக்கமுடைய வெள்ளைக்கார் ஒன்றில் வந்த நான்கு பேர் கொண்ட இளைஞர் கும்பலொன்று துவிச்சக்கர வண்டியில் பயணித்த மாணவியினை கடத்தி சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
கடத்தலுடன் தொடர்புடைய இரு இளைர்கள் கைது
சம்பவம் தொடர்பில் மாணவியின் பெற்றோர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன், பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையின் போது கடத்தலுடன் தொடர்புடைய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டு இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மாணவி கடத்தலுக்கு முக்கிய காரணமாக இருந்த இரண்டு இளைஞர்களையும்,கடத்தி செல்லப்பட்ட காரினையும்
பொலிஸார் தேடி வருவதுடன், கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக மாணவியின்
தொடர்பு இல்லாத நிலையில் பெற்றோர் தவித்து வருகின்றதாக கூறப்படுகின்றது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் வழுக்கி விழுந்த தமிழ், பதறி அடித்து ஓடிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
