உக்ரைனில் போர் பதற்றம்! - இலங்கை பிரஜைகளுக்கு அவசர அறிவிப்பு
உக்ரைனில் அண்மை காலமாக போர் பதற்றம் ஏற்பட்டுள்ள பின்னணியில் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக இலங்கை அரசாங்கம் இன்று தெரிவித்துள்ளது.
உக்ரைனில் வசிக்கும் 14 மாணவர்கள் உட்பட 40க்கும் மேற்பட்ட இலங்கை பிரஜைகளுடன் அவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்யும் நோக்கில் நெருங்கிய தொடர்பில் இருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
உக்ரைனில் உள்ள 14 இலங்கை மாணவர்களில் ஆறு பேர் தற்காலிகமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில், அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகம் எஞ்சிய எட்டு மாணவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனில் உள்ள அனைத்து இலங்கை பிரஜைகளையும் அவதானத்துடன் செயற்படுமாறும் அங்காராவிலுள்ள இலங்கை தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறும் வெளிவிவகார அமைச்சு கோரியுள்ளது.
தற்போது உக்ரைனுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு அனைத்து இலங்கை பிரஜைகளுக்கும் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு பற்றிய அச்சங்களுக்கு மத்தியில், நாட்டின் கிழக்கில் பதட்டங்கள் அதிகரித்துள்ளன, அங்கு உக்ரேனியப் படைகள் ரஷ்யா ஆதரவு பிரிவினைவாதிகளுடன் நீண்ட மோதலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் முக்கிய பிரபலங்கள் மாற்றம்.. யார் யார் தெரியுமா? Cineulagam
