பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய சாணக்கியன் தொடர்பான பதாகை! எடுக்கப்பட்ட நடவடிக்கை
நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நிதி அமைச்சராக பதவியேற்கவுள்ளதாக தெரிவித்து பதாகை காட்சிப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணி முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக தெரியவருகிறது.
மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணி என உரிமை கோரப்பட்ட பதாகையொன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
அதில் புதிய நிதியமைச்சராக பதவியேற்கவுள்ள இராசமாணிக்கம் சாணக்கியனுக்கு வாழ்த்துக்கள் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் இந்த விடயம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் தங்களது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணி முறைப்பாடு செய்துள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் தலைவர் கி.சேயோன் இன்றைய தினம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதுடன், இது ஒரு அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த இழி செயற்பாட்டுக்கும் வாலிபர் முன்னனிக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட போது மட்டக்களப்பு வாலிபர் முன்னணி தலைவர் மற்றும் உப தலைவர், சாணக்கியனின் ஒருங்கிணைப்பாளர் தினேஷ் ஆகியோரும் உனடிருந்ததாகவும் தெரியவருகிறது.
தொடர்புடைய செய்தி...
புதிய நிதியமைச்சராக பதவியேற்கவுள்ள சாணக்கியனுக்கு வாழ்த்துக்கள்! காட்சிப்படுத்தப்பட்ட பதாகை





அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri
