அவுஸ்திரேலிய மெல்போர்ன் துணைத் தூதரர் பதவி நீக்கத்திற்கு இடைக்காலத்தடை
அவுஸ்திரேலிய மெல்போர்னில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தின் தூதரகத் தலைவராக(மினிஸ்டர்) இருந்த பி.ஆர்.பி.எம்.ஏ. தேவேந்திரா திடீரென பதவி நீக்கப்பட்டமைக்கு எதிராக இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
வெளியுறவு அமைச்சின் மனிதவளப் பிரிவின் இயக்குநர் ஜெனரலால் வழங்கப்பட்ட பணி நீக்கத்திற்கான உத்தரவை, மனு விசாரணை முடியும் மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சினால் 2025 ஒகஸ்ட் 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மெல்போர்னில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தின் தூதரகத் தலைவரின் பதிவி நீக்கப்பட்டு நாட்டுக்கு அழைக்கப்படுவதற்காக 16.07.2025 அன்று வெளியிட்ட கடிதத்தின் பலம் இழப்பட்டுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இடைக்காலத் தடை
மேன்முறையீட்டு நீதிமன்றம், அவரை அந்தப் பதவியில் இருந்து மாற்றுவதையும், முறையான நீதிமன்ற உத்தரவு இல்லாமல் அவரது கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்படுவதையும் தடுக்கும் வகையில் இடைக்காலத் தடை விதித்தது.
இதன் பிரதிவாதிகளான சுமித் திஸாநாயக்க மற்றும் வெளியுறவு அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா ஆகியோருக்கு எதிராகவே இடைக்காலத் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



