மின்சார சபை ஊழியர்களுக்கு இறுதிக்கெடு
மின்சார சபை நான்கு நிறுவனங்களாக மறுசீரமைக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றில் இணைவது அல்லது சுயவிருப்பில் ஓய்வுபெறுவது தொடர்பில் ஊழியர்களுக்கு இறுதிக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையின் செயற்பாடுகளை இலகுபடுத்தும் நோக்குடன் அதனை நான்கு நிறுவனங்களாக மறுசீரமைக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
வேலைநிறுத்த போராட்டம்
அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மின்சார சபையின் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், குறித்த நான்கு நிறுவனங்களில் ஏதாவது ஒன்றில் இணைந்து தொடர்ந்தும் பணியாற்றுதல் அல்லது சுயவிருப்பின் பேரில் ஓய்வுபெறல் ஆகிய ஏதாவது ஒரு தீர்மானத்தை மேற்கொள்ளுமாறு மீண்டும் மின்சார சபை ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதி அதற்கான நாளாகவும் கெடுவிதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மறுசீரமைக்கப்பட்ட நான்கு நிறுவனங்களுக்கும் பணிப்பாளர் சபை உள்ளிட்ட நிர்வாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மின்சார சபையின் முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri
