அமெரிக்காவுக்காக ரஷ்யாவை தவிர்க்கும் இலங்கை

Ranil Wickremesinghe Tissa Vitharana Sri Lanka Economic Crisis United States of America Sri Lanka Fuel Crisis
By Benat Jun 25, 2022 04:51 PM GMT
Report

அமெரிக்காவை பகைத்துக்கொள்ளாமலிருக்க நாட்டு மக்களை பலியிடுவதை அரசாங்கம் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.  

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும் வரை எரிபொருள் வரிசையில் இருந்து பதிவாகும் மரணங்களுக்கு யார் பொறுப்பேற்பது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலைக்கு எரிபொருளை பெற்றுக்கொள்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தாமலிருப்பது வேடிக்கையாகவுள்ளது  என்றும் திஸ்ஸ விதாரண குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் விநியோகம் தொடர்பில் எரிசக்தி அமைச்சரின் புதிய அறிவிப்பு 

நாட்டின் பிரதான பிரச்சினை

அமெரிக்காவுக்காக ரஷ்யாவை தவிர்க்கும் இலங்கை | Sri Lanka Avoids Russia For Us

சமூக மட்டத்தில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் இதுவரை தீர்வு பெற்றுக்கொடுக்கவில்லை. மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடியினை நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ளார்கள்.

எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய உணவு பொருட்கள் தொடர்பிலான பிரச்சினை நாளுக்கு நாள் தீவிரமடைந்து செல்கிறதே தவிர குறைவடையவில்லை. எரிபொருள் விநியோகத்தில் தோற்றம் பெற்றுள்ள சிக்கல் நிலைமை நாட்டின் பிரதான பிரச்சினையாக உள்ளது.

இதற்கு தீர்வுகாண அரசாங்கம் நடைமுறைக்கு சாத்தியமான எத்திட்டங்களையும் முன்னெடுக்கவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை எதிர்வரும் ஒக்டோபர் மாத காலப்பகுதியில் பெற்றுக்கொள்ள முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளரின் மனிதாபிமானச் செயல்! இலவசமாக வழங்கப்பட்ட மண்ணெண்ணெய் 

சர்வதேந நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும் வரை காத்திருக்கும் போது எரிபொருள் வரிசையில் இருந்து பதிவாகும் மரணங்களுக்கு யார் பொறுப்பேற்பது. எரிபொருள் வரிசைக்கு செல்பவர்களின் உயிருக்கு உத்தரவாதமில்லாத அவலநிலை ஏற்பட்டுள்ளது.

ஆசிய கண்டத்தில் பெரும்பாலான நாடுகள் ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் எரிபொருளை பெற்றுக்கொள்கின்றன. ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ள அரசாங்கம் நடைமுறைக்கு சாத்தியமான எத்தீர்மானங்களையும் இதுவரை முன்னெடுக்கவில்லை.

ரணில் விக்ரமசிங்கவின் எண்ணம்

அமெரிக்காவுக்காக ரஷ்யாவை தவிர்க்கும் இலங்கை | Sri Lanka Avoids Russia For Us

ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை பெற்றுக்கொண்டால் அமெரிக்காவை பகைத்துக்கொள்ள நேரிடும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கருதுகிறார்.

அமெரிக்காவை பகைத்துக்கொள்ளாமலிருக்க நாட்டு மக்களை பலியிடுவதை அரசாங்கம் தவிர்த்துக்கொள்ள வேண்டும். ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை பெற்றுக்கொள்வது குறித்து அரசாங்கத்திடம் பல யோசனைகளை முன்வைத்துள்ளோம்.

இருப்பினும் இதுவரை சாதகமான பதிலை அரசாங்கம் குறிப்பிடவில்லை. எரிபொருள் மற்றும் எரிவாயு பெறுகைக்கான வரிசை நீண்டு செல்கிறதே தவிர குறைவடையவில்லை என்றார்.  

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை! தயார் நிலையில் பொலிஸார் 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US