வயலுக்குச் சென்ற 71 வயது முதியவர் சடலமாக மீட்பு - பொலிஸார் தீவிர விசாரணை
முல்லைத்தீவு - மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்லாவி 3ஆம் யூனிட் பகுதியில் முதியவர் ஒருவர் வயலுக்குச் சென்று வீடு திரும்பாத நிலையில், அவரைத் தேடிச் சென்றபோது சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் கடந்த 12ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர், 260 பாரதி நகர், யோகபுரம், மல்லாவியைச் சேர்ந்த 71 வயதுடைய சின்னையா திருசெந்தூர் என்பவராவார்.
71 வயது நபர் உயிரிழப்பு
குறித்த நபர் வயலுக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற நிலையில், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாமல் இருந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, வீட்டிலிருந்தவர்கள் அவரைத் தேடிச் சென்றபோது, உழவு இயந்திரத்தில் பூட்டப்பட்டிருந்த சில்லில் சிக்குண்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

உடனடியாக மல்லாவி வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோதும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், பிரேத பரிசோதனைக்காக சடலம் முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மல்லாவி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
60 மில்லியன் பணத்தை திருப்பி அனுப்பிய யாழ். மாவட்டம் - NPP கையில் சிக்கிய அரசியல்வாதிகளின் கோப்புகள்
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையும் விவகாரம்: வெளிப்படையாக எதிர்ப்பு துவங்கியது News Lankasri