கொழும்பில் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளரின் மனிதாபிமானச் செயல்! இலவசமாக வழங்கப்பட்ட மண்ணெண்ணெய்
நாட்டில் பொருளாதார நெருக்கடி உச்சம் தொட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக பொதுமக்கள் பல நாட்களாக வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எரிபொருளின் விலை கடுமையாக அதிகரித்துள்ள நிலையில், கறுப்புச் சந்தையில் எரிபொருள் அதிக விலையில் விற்பனை செய்யும் நடவடிக்கையும் அதிகரித்துள்ளது.
இந்த நிலைகள் காரணமாக பொதுமக்கள் கடும் நெருக்கடிக்கும், பாதிப்புக்கும் முகம்கொடுத்துள்ள நிலையில் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் ஒருவர் பொதுமக்களுக்கு இலவசமாக மண்ணெண்ணெய் விநியோகம் செய்துள்ளார்.
இலவசமாக வழங்கப்பட்ட மண்ணெண்ணெய்
மஹரகம - தெஹிவளை வீதியில் உள்ள இலங்கை போக்குவரத்து சபை டிப்போவிற்கு அருகில் உள்ள ஹைவே எண்டர்பிரைசஸ் என்ற எரிபொருள் நிரப்பு நிலையத்திலேயே இவ்வாறு இலவசமாக மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்டுள்ளது.
குறித்த, எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் மக்களின் இன்னல்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, மண்ணெண்ணெய் பெறுவதற்காக குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் பெருமளவானவர்கள் குவிந்தனர்.





அதிரவைக்கும் திருப்பம்... இஸ்ரேல் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரும் உலகளாவிய யூத பிரபலங்கள் News Lankasri

அரையிறுதிக்கு செல்ல இலங்கைக்கு உள்ள வாய்ப்பு: பாகிஸ்தானை வீழ்த்தினாலும் இது நடக்க வேண்டும் News Lankasri
