வரலாற்று சாதனையை இலக்கு வைத்துள்ள உடுப்புக்குளம் தமிழ் வித்தியாலயம்(Photos)
முல்லைத்தீவு - உடுப்புக்குளம் தமிழ் வித்தியாலயத்தின் முதல் தேசியமட்ட போட்டி மாணவர் ஒருவர் தெரிவாகியுள்ளார்.
யாழ்ப்பாணத்தின் துரையப்பா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாகாண மட்ட போட்டியில் கலந்துக்கொண்டு தனது திறமையை வெளிக்காட்டியதன் மூலம் உடுப்புக்குளம் தமிழ் வித்தியாலய மாணவரான கிதுர்சன் இந்த சாதனையை படைத்துள்ளார்.
வலயமட்ட போட்டிகள்
முல்லைத்தீவு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான வலயமட்ட போட்டிகள் புதுக்குடியிருப்பு சீ.சீ.பாடசாலை மைதானத்தில் நடைபெற்றிருந்தது.
உடுப்புக்குளம் தமிழ் வித்தியாலய மாணவன் த.கிதுர்சன்(தவராசா கிதுர்சன்) இரு போட்டிகளில் பங்கெடுத்திருந்தார்.
400m , 800m ஓட்ட நிகழ்ச்சிகளில் பங்கெடுத்திருந்த அவர் இரு போட்டிகளிலும் முதலிடத்தை பெற்றுக்கொண்டார்.
கிதுர்சன் 2023 ஆம் ஆண்டில் க.பொ.த (சா/த) பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர் ஆவார்.
மாகாண மட்டப் போட்டிகள்
இந்நிலையில் மாகாண மட்டத்திலான போட்டிகள் யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றிருந்தது.
உடுப்புக்குளம் தமிழ் வித்தியாலய மாணவன் த.கிதுர்சன் 400m மற்றும் 800m ஓட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தார்.
800m ஓட்டத்தில் மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்ட கிதுர்சன் தேசிய மட்டத்தில் 800m போட்டிகளில் கலந்துகொள்வதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்த 800m ஓட்ட நிகழ்வில் இரண்டாம் இடத்தினை யாழ் மாவட்ட பாடசாலை பெற்றுக்கொள்ள முதலாம் இடத்தினை முல்லைத்தீவு முத்தையன்கட்டு வலதுகரை பாடசாலை பெற்றுக் கொண்டதாக கிதுர்சன் குறிப்பிட்டிருந்தார்.
400m ஓட்டத்தில் கிதுர்சன் நான்காம் இடத்தினைப் பெற்றதாகவும் கால் விரலில் ஏற்பட்ட காயத்தினால் இந்த இடரை எதிர் கொண்டதாகவும் மேலும் குறிப்பிட்டிருந்தார்.
பாடசாலையில் கௌரவிப்பு
மேலும், கிதுர்சன் பாடசாலை மட்டத்தில் பெருமை கொள்ளப்பட்டு 22.09.2023 அன்று பாடசாலையில் வைத்து கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில் கிதுர்சனின் பெற்றோர் பாடசாலைச் சமூகத்தினரால் வாழ்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
உடுப்புக்குளம் தமிழ் வித்தியாலயத்தின் வரலாற்றில் தேசிய மட்டப் போட்டிகளில் பங்குற்றும் வாய்ப்பை பெற்றமைக்காக பாடசாலைச் சமூகம் மற்றும் விளையாட்டு கழகம் ஒன்றும் இணைந்து இந்த பாராட்டை வழங்கியுள்ளன.
தேசிய மட்ட போட்டிகளில் எதிர்வரும் மாதத்தில் கலந்துகொள்ள இருக்கும் கிதுர்சனுக்கு இவை ஊக்கமளிப்பதாக இருக்கின்றன என கிதுர்சனின் பெற்றோர் குறிப்பிட்டிருந்தனர்.
விளையாட்டு கழகத்தின் கௌரவிப்பு
பாடசாலையுடன் இணைந்து விளையாட்டுச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது இந்த விளையாட்டு கழகம்.
10.09.2023 அன்று குறித்த மைதானத்தில் நடைபெற்ற விருந்துபசார நிகழ்விலும் த.கிதுர்சன் விருந்தளிக்கப்பட்டு பரிசுமளிக்கப்பட்டு கௌரவப்படுத்தப் பட்டிருந்தமையும் இங்கு நோக்க வேண்டும்.
கிதுர்சனுக்கு ரூபா.10000 பணப்பரிசும் கழகத்தால் வழங்கி வைக்கப்பட்டது.
சிறந்த பயிற்றுவிப்பாளர்
பாடசாலையில் விளையாட்டு பிரிவு பயிற்றுவிப்பாளராக நதீஸ் ஆசிரியர் கடமையாற்றுகின்றார்.
நதீஸ் ஆசிரியர் சிறந்த அரவணைப்பும் புரிதலோடும் தன்னை பயிற்றுவிப்பதாகவும் நிச்சயமாக தேசியப் போட்டியில் வெற்றி பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்ப்பேன் எனவும் கிதுர்சன் குறிப்பிட்டார்.
தங்களுக்கு கிடைத்த பெரும் வரம் நதீஸ் ஆசிரியர் என கிதுர்சனின் தந்தை தவராசா குறிப்பிட்டிருந்தார்.
பாடசாலையின் அதிபர் திரு குணபாலன் மற்றும் ஆசிரியை அமுதா ஆகியோரும் தன்னை வெகுவாக ஊக்கமளிப்பதாகவும், ஏனைய ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களும் ஊக்கமளிப்பதாக கிதுர்சனின் உரையாடலிலிருந்து தகவல் பெற முடிந்தமையும் இங்கே நோக்கத்தக்கது.
நீண்ட கால தொடர் முயற்சியால் உடுப்புக்குளம் தமிழ் வித்தியாலயம் விளையாட்டுத்துறையில் பிரகாசிக்கின்றது என்பதும் மகிழ்வுக்குரியது.
மாகாண மட்டத்திலான விளையாட்டு செயற்பாட்டில் முல்லைத்தீவு கல்வி வலயம் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.










மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
