ஐ.நாவின் கிடுக்கிப்பிடியில் இருந்து தப்புவதற்கு கோட்டாபய - பிள்ளையான் மாற்றுத் திட்டம் (Video)
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சனல் 4 வெளியிட்ட ஆவணப்பட சர்ச்சையானது இலங்கை அரசியலில் பெரும் குழப்ப நிலையை தோற்றுவித்து வருகிறது.
ஆளும்தரப்பு, எதிர்தரப்பு மற்றும் இலங்கையின் கத்தோலிக்க சமூகம் உள்ளிட்ட அனைத்து தரப்புக்களும் சர்வதேச விசாரணைகளை வலியுறுத்தி வருகின்றன.
இவ்வாறு இலங்கை அரசியலில் சனல் 4 ஆவணப்படம் ஏற்படுத்திய தாக்கங்கள் தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இலங்கையின் புலனாய்வு செய்தியாளர் எம். எம் நிலாம்டீன் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார்.
மேலும், இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலுக்கு நீதி கிடைக்க வேண்டுமென சர்வதேச விசாரணையை பல்வேறு தரப்புக்களும் கோரி வருகின்றன எனவும் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
''ஆவணப்படத்தில் குற்றவாளியாக பெயரிடப்பட்ட கோட்டாபய, பிள்ளையான் உள்ளிட்டவர்களும் சர்வதேச விசாரணையை கோரி வருகின்றனர். எனினும் இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வதேச விசாரணை தொர்பில் இதுவரை எந்த கருத்துக்களையும் வெளிப்படுத்தவில்லை.
மேலும் அசாத் மௌலானா பிள்ளையான் செய்த அனைத்து குற்றங்களுக்கும் உடந்தையாளர்.
இன்னிலையில், அவர் குற்றங்களை ஒப்புக்கொண்டதன் மூலம் சர்வதேச விசாரணையில் மன்னிக்கப்படுவதற்க்கான வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுகிறது'' என தெரிவித்தார்.

அடேங்கப்பா முதல் நாளில் உலகம் முழுவதும் மாஸ் வசூல் வேட்டை செய்த அஜித்தின் குட் பேட் அக்லி... Cineulagam
