போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு மிகப் பெரிய ஆபத்து! வெளியான அறிவிப்பு
புனர்வாழ்வு பணியக சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் அரகலயவில் ஈடுபட்டவர்கள் புனர்வாழ்விற்கு அனுப்பப்படும் மிகப்பெரிய ஆபத்துள்ளது என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.
புனர்வாழ்வு என்ற போர்வையில் தன்னுடன் உடன்படாதவர்கள் மாற்றுக்கருத்துடையவர்களிற்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்பதற்கான அனுமதியை இந்த சட்டமூலம் அரசாங்கத்திற்கு வழங்குகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். .
நேர்காணல் ஒன்றின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆபத்து
மேலும் வன்முறை தீவிரவாதம் என்பது எங்கள் நாட்டில் சரியான விதத்தில் வரைவிலக்கணப்படுத்தப்படவில்லை,ஏன் பயங்கரவாதம் என்றால் என்னவென்பதற்கு கூட சரியான விளக்கம் இல்லை இதன் காரணமாகவே அவர்களால் பயங்கரவாத தடைச்சட்டத்தை துஸ்பிரயோகம் செய்ய முடிகின்றது.
ஆகவே அவர்கள் இந்த சட்டமூலத்தை நிறைவேற்றினார்கள் என்றால் அரகலயவில் ஈடுபட்டவர்கள் புனர்வாழ்விற்கு அனுப்பப்படும் ஆபத்துள்ளது.
இரண்டாவது விடயம் ஏன் அவர்கள் போராளிகள் என குறிப்பிடுகின்றனர்.13 வருடங்களாகிவிட்டது. மகிந்த ராஜபக்ச அரசாங்கமும் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கமும் மிகவும் பெருமையுடன் தாங்கள் 12000 பேரை புனர்வாழ்விற்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளன.
அந்த புனர்வாழ்வு என்பது கூட சர்வதேச தராதரத்திற்கு ஏற்றதாக இல்லை. ஆகவே நான் என்ன தெரிவிக்க வருகின்றேன் என்றால் இது புதிய விடயமல்ல தொடரும் ஒரு விடயம் தொடர்ச்சி.
புனர்வாழ்வு நிலையங்களில் மனித உரிமை மீறல்கள்
இது முன்னாள் போராளிகள் என தெரிவிக்கப்பட்டவர்களின் புனர்வாழ்வுடன் ஆரம்பமானது, அந்த நிலையங்கள் பின்னர் போதைப்பொருள் புனர்வாழ்வு நிலையங்களாக 2013 மாற்றப்பட்டன. அங்கு மனித உரிமை மீறல்கள் இடம்பெறுகின்றன, இது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
அதன் பின்னர் அவர்கள் தீவிரவாத மயப்படுத்தலில் இருந்து விடுவிப்பதற்கான சட்டத்தை கொண்டுவந்தார்கள், தற்போது இந்த மூன்றையும் புனர்வாழ்வு பணியகம் என்ற ஒன்றிற்குள் கொண்டுவருகின்றார்கள்.அவர்கள் ஒவ்வொரு செங்கல்லாக இதனை கட்டியெழுப்பியுள்ளனர்.
கட்டாய போதைப்பொருள் புனர்வாழ்வு நடவடிக்கைகள் பலனளிப்பதில்லை இது ஆதாரங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலும் நாட்டிற்கு வெளியேயும் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது ஏனைய ஆய்வுகள் இதனை உறுதி செய்துள்ளன. மேலும் இது ஒரு மனித உரிமை தராதரங்களை மீறும் நடவடிக்கை என தெரிவித்துள்ளார்.