இலங்கைத் தீவில் மீண்டுமொரு போராட்டம்! தொடர்ந்து வரும் எச்சரிக்கைகள்
நாட்டில் மீண்டும் ஒரு போராட்டம் முன்னெடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டில் பட்டினியால் வாடும் மக்கள் அடுத்து போராட முன்வருவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, நாட்டில் இருண்ட நிலைமை ஏற்படுவதை தடுப்பதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று விமல் வீரவன்ச சுட்டிக்காட்டினார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பசியை ஒழிக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டம்
மக்களின் பட்டினிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முறையான திட்டம் இருக்க வேண்டும் எனவும், பசியை ஒழிக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டம் குறித்து அறிந்துகொள்ள மக்களுக்கு உரிமை உண்டு.
ஆட்சியாளர்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்குப் போதுமான டொலர்கள் இருக்கின்றது. மகாராணியின் இறுதிச் சடங்கிற்காக ஒரு குழு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
உள்ளூர் கைத்தொழில்துறையினரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த அரசாங்கம் பாடுபட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.