மீண்டும் காலி முகத்திடலில் ஒன்று திரண்ட போராட்டக்காரர்கள்(Video)
கொழும்பு - காலி முகத்திடலில் மீண்டும் போராட்டக்காரர்கள் ஒன்றிணைந்து கையெழுத்து திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கையெழுத்து திரட்டும் நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையில் கடந்த மே, ஜூன் மற்றும் ஜூலை ஆகிய மாதங்களின் ஒன்பதாம் திகதிகளில் இலங்கையில் இடம்பெற்ற போராட்டங்களின் போது பாரிய அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன.
மிகப்பெரிய அரசியல் மாற்றங்களையும் இந்த போராட்டங்கள் இலங்கையில் நிகழ்த்தி காட்டியிருந்ததோடு, வன்முறைகளும் வெடித்திருந்தன.
இதன்போது ஏற்பட்ட வன்முறைகளால் பாதிக்கப்பட்ட, உயிரிழந்தவர்களை நினைவுகூரும் பொருட்டும் ஒவ்வொரு மாதமும் ஒன்பதாம் திகதி காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று திரள்வது வழமை.
அந்த வகையிலேயே இன்றையதினமும் கொழும்பு காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்றிணைந்து இவ்வாறு கையெழுத்து திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.