சர்வ கட்சி அரசாங்கம் தொடர்பில் ஜனாதிபதியிடம் மொட்டுக் கட்சி முன்வைத்துள்ள கோரிக்கை
உத்தேசித்துள்ள புதிய அரசாங்கத்தை மேலும் தாமதமின்றி விரைந்து ஏற்படுத்தும்படி
ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்கள், ஜனாதிபதி ரணில்
விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நிதி அமைச்சருமான பசில்ராஜபக்ச, பொதுச்செயலாளர் சாகர காரியவசம், அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஹித அபேகுணவர்த்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பவித்ரா வன்னியாராய்ச்சி, நாமல் ராஜபக்ச, சஞ்சீவ எதிரிமன்ன ஆகியோர் கூட்டாக இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
சர்வகட்சி அரசாங்கம்
நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பல்வேறு தரப்பினரையும் ஒன்றிணைத்துத் தாம் அமைக்க உத்தேசித்துள்ள சர்வகட்சி அரசாங்கமோ, சர்வ கட்சி ஆட்சியோ, தேசிய அரசாங்கமோ எது என்றாலும், மேலும் தாமதிக்காமல் விரைந்து அதனை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி 'மொட்டுக்' கட்சியினர் ஜனாதிபதியைக் கோரியுள்ளனர்.
ஜனாதிபதியின் அரசியல் நடவடிக்கைகளுக்கு 'மொட்டு'க் கட்சி நிபந்தனையின்றி முழு ஒத்துழைப்பு தரும் என்றும் அவர்கள் உறுதியளித்துள்ளனர்.
கோட்டாபயவிற்கு பதவி வழங்கப்படுவது குறித்து வெளியாகியுள்ள தகவல் |
பரபரப்பாகும் கொழும்பு - கோட்டாபயவின் வீட்டுக்கு தீவிர பாதுகாப்பு - அதிரடி படையினர் குவிப்பு |