அரசியல் ரீதியாக நாமலுக்கு ஏற்பட்டுள்ள கடும் எதிர்ப்பு
நாமல் ராஜபக்சவுக்கு எதிராக அரசியல் ரீதியாக கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதாக, பொதுஜன பெரமுன கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாமல் ராஜபக்ச, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த, ரோஹித அபேகுணவர்தன ஆகியோருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்குவது தொடர்பில் யோசனைகள் முன்வைக்கப்பட்டதற்கு அரசாங்கத்துக்குள் எதிர்ப்பு எழுந்துள்ளது.
நாமலுக்கு எதிர்ப்பு
பொதுஜன பெரமுன கட்சிக்குள் இருந்தே எதிர்ப்பு வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகியுள்ளது.
மக்களின் கோபத்திற்குள்ளான நபர்களின் திருப்திக்காக மீண்டும் அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளது. இந்த செயற்பாடு மீண்டும் மக்களின் கோபத்தை தூண்டி பேரழிவை ஏற்படுத்தலாம் என இந்த அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
சமாளிக்கும் நடவடிக்கையில் பிரதமர்
பொதுஜன பெரமுனவுக்குள் ஏற்பட்டுள்ள இந்த எதிர்ப்பினை சமாதானப்படுத்துவதற்கு பிரதமர் தலைமையில் பிரபலங்கள் செயற்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.