தங்கத்தின் விலையில் பதிவாகும் தலைகீழ் மாற்றம் - நகை வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி
கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி 24 கரட் தங்கப்பவுணொன்றின் விலை இன்று (02.02.2026) 368,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 337,600 ரூபாவாக காணப்படுகிறது.
கடந்த கிழமையளவில் தங்கத்தின் விலையானது வரலாற்றில் முதன்முறையாக சுமார் 4 இலட்சம் ரூபாவை எட்டியிருந்தது.
இவ்வாறான சூழலில் தற்போது தலைகீழ் மாற்றத்தை பதிவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உலக சந்தை நிலவரம்
இதேவேளை உலக சந்தையில் தங்க விலை கணிசமாக சரிந்துள்ளதாகவே தெரியவருகிறது.

அதன்படி உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 4,660 – 4,700 டொலர்களாக உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்திய நாட்களில் 5,000 டொலர்கள் வரையில் பதிவாகியிருந்த போதும் தற்போது 4 - 7% வரை குறைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வல்லரசுகளின் மோதல்களுக்கு மத்தியில் இந்து சமுத்திரத்தைப் பாதுகாக்க இணக்கப்பாடு: புதுடில்லியில் உயர்மட்டப் பேச்சு
வெற்றி பெற்ற பிறகு போர்களில் சேரும் நபர்கள் எங்களுக்குத் தேவையில்லை! பிரித்தானிய பிரதமருக்கு ட்ரம்பின் பதிவு
போரின் தொடக்கத்தை அறிவித்த அதே தொப்பியுடன்.. உயிரிழந்த 6 அமெரிக்க படை வீரர்களுக்கு மரியாதை செலுத்திய ட்ரம்ப்