கோர விபத்துக்களில் 9 பேர் பரிதாபச் சாவு!

Sri Lanka Police Sri Lanka Police Investigation Accident
By Rakesh Jan 25, 2023 01:51 PM GMT
Report

இலங்கையின் 6 இடங்களில் கடந்த 24 மணிநேரத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 6 வயது மாணவி உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் தகவல்கள் தெரிவித்துள்ளன. 

நீர்கொழும்பில் முச்சக்கரவண்டியும் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்து நேர்ந்துள்ளது. 

இதன்போது 25 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதியான இளைஞரும், அதில் பயணித்த நீர்கொழும்பு, வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த 68, 64 வயதுகளையுடைய வயோதிபத் தம்பதியினரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

விபத்து தொடர்பில் லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோர விபத்துக்களில் 9 பேர் பரிதாபச் சாவு! | Sri Lanka Accident Today Police Investigation

காலி - எல்பிட்டியவில் ஹயஸ் வாகனமும் சிறியரக பேருந்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இதன்போது ஹயஸ் வாகனத்தின் சாரதியான 42 வயதுடைய குடும்பஸ்தரும், ஹயஸ் வாகனத்தில் முன் ஆசனத்தில் அமர்ந்து சென்ற 19 வயதுடைய இளைஞரும் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த சாரதியும், இளைஞரும் அம்பாந்தோட்டையைச் சேர்ந்தவர்களாவர். விபத்து தொடர்பில் மினிபஸ்ஸின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அநுராதபுரத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த பேருந்தில் இருந்து மாணவி ஒருவர் முன்பக்கக் கதவின் ஊடாக தவறி விழுந்துள்ளார்.

இதன்போது காயமடைந்த 6 வயதுடைய மாணவி அனுராதபுரம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

கோர விபத்துக்களில் 9 பேர் பரிதாபச் சாவு! | Sri Lanka Accident Today Police Investigation

எம்பிலிப்பிட்டியவில் மோட்டார் சைக்கிளும் வானும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இதன்போது மோட்டார் சைக்கிள் செலுத்திய 28 வயதுடைய இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் வான் சாரதி உள்ளிட்ட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு - மாளிகாவத்தையில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இதன்போது மோட்டார் சைக்கிள் ஒன்றைச் செலுத்தி வந்த 37 வயதுடைய பம்பலப்பிட்டியைச் சேர்ந்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

மற்றைய மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த 22 வயதுடைய இளைஞர் சிறுகாயங்களுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொரளையில் ஓட்டோ ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இதன்போது 29 வயதுடைய ஓட்டோ சாரதியான இளைஞர் உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞர் மருதானையைச் சேர்ந்தவராவார். விபத்து தொடர்பில் காரின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

May you like this Video



மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, கோண்டாவில் கிழக்கு

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிகுளம், முதலியார்குளம்

06 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
அகாலமரணம்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US