ஜனாதிபதியை கடுமையான வார்த்தைகளால் சாடிய பௌத்த தேரர்
அண்மையில் கவனத்தை ஈர்த்த பாம்பு கோலுடன் கொழும்பை நோக்கி வந்தடைந்த தேரர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை கள்ளத்தோணி என குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், தனது பாதயாத்திரையின் போது, கடுகண்ணாவையில் இரவு தங்கியிருந்த வேளை பல்வேறு அச்சுறுத்தல் அழைப்புக்கள் வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
தனது நிர்வாக குழுவினருக்கும் தொலைபேசி மூலம் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
வீதியில் பயணித்த போது சிலர் வாகனங்களை தனது உடலுக்கு அருகில் செலுத்தி அச்சுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஒரு நிகழ்ச்சியில் தன்னை மறைமுகமாக அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாக சுட்டிக்காட்டிய அவர், ஜனாதிபதி குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.
இவ்விடயம் உள்ளிட்ட பல முக்கிய தகவல்களை ஆராய்கின்றது நியூஸ் இன்சைக்ட் நிகழச்சி,