வவுனியா - செட்டிகுள வீதி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
வவுனியா - செட்டிகுளம் தட்டாங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (25.01.2023) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
செட்டிகுளம் பகுதியில் இருந்து பூவரசங்குளம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த நபர் தட்டாங்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்துகொண்டிருந்த கனரக வாகனத்துடன் மோதியுள்ளது.

பொலிஸார் விசராணை
இந்த விபத்தில் படுகாயமடைந்த நபர் உடனடியாக மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் சிகிச்சை பலனின்றி உயிழந்துள்ளார்.
சம்பவத்தில் ரங்கெத்கம பகுதியை சேர்ந்த நந்தன கிருசாந்த வயது 41 என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பான விசராணைகளை செட்டிகுளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.







கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam