அநுர அரசாங்கத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நவம்பரில்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசின் 2026 ஆம் நிதியாண்டுக்குரிய வரவு – செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் 7 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
நிதி அமைச்சர் என்ற வகையில் பாதீட்டை முன்வைத்து ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்.
வரவு – செலவுத் திட்டம்
இது வரவு - செலவுத் திட்ட உரையாகும். அதன்பின்னர் வரவு- செலவுத் திட்டம் தொடர்பான (2 ஆம் வாசிப்பு மீதான) விவாதம் நடைபெறும்.

2 ஆம் வாசிப்பு மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அது நிறைவேற்றப்பட்ட பின்னர் 3 ஆம் வாசிப்புமீதான விவாதம் நடைபெறும். இது அமைச்சுகளுக்குரிய நிதி ஒதுக்கீடுகளைக் குறிக்கும்.
டிசம்பர் நடுப் பகுதியில் பாதீடு மீதான இறுதி வாக்கெடுப்பு நடைபெறும்.
வரவு- செலவுத் திட்டத்தின் முன்னோடியான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் சபையில் முன்வைக்கப்படும்.
இது முதலாம் வாசிப்பாகக் கருதப்படும். இது தேசிய மக்கள் சக்தி அரசின் 2 ஆவது வரவு - செலவுத் திட்டமாகும்.
விரைவில் அவிழும் ஈஸ்டர் தாக்குதலின் மர்மங்கள்! சுரே சாலே தரப்பின் பொய்களுக்கு எதிரான ஆதாரங்கள் நீதிமன்றில்
மோசமடையும் வானிலை தொடர்பில் விழிப்புடன் இருக்கவும்..! பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை