அனைத்து அமைச்சுப் பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்ட அமைச்சர் ரொஷான் : ரணிலின் அதிரடி நடவடிக்கை
விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து பதவிகளில் இருந்தும் ரொஷான் ரணசிங்க பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசியக் கொடிக்கு தடை விதிக்கவும்: மாவீரர் நாளுக்கு நீதிமன்றம் அனுமதி! மக்களிற்கு பகிரங்க அழைப்பு (Video)
இலங்கை கிரிக்கெட் சபை தொடர்பில் அண்மைக்காலமாக ஏற்பட்டு வரும் முறுகல் நிலை காரணமாக ரொஷான் ரணசிங்க பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீர்பாசனம், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரம் உள்ளிட்ட அமைச்சுப் பதவிகளை ரொஷான் ரணசிங்க வகித்திருந்தார்.
காரசாரமான நாடாளுமன்ற உரை
இதேவேளை, இன்றையதினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ரொஷான் ரணசிங்க, தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கதான் பொறுப்புக் கூற வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
அத்துடன், தான் அமைச்சுப் பதவியை வகிக்கத் தகுதியானவர் என்றும் உரையாற்றியிருந்தார்.
அத்துடன், நாமல் ராஜபக்ச, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பில் என்னை எச்சரித்தார் என்றும், ரணில் ஒரு பாம்பு நீங்கள் அவதானமாக இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார் எனவும் ரொஷான் ரணசிங்க தனது நாடாளுமன்ற உரையில் குறிப்பிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
மாவீரர்களை நினைவேந்த தயார் நிலையில் தாயகம் : கிழக்கில் வலம் வரும் போலி சுவரொட்டிகள் - சதி நடவடிக்கை அம்பலம்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |