19 வருடங்களின் பின்னர் யாழ். பல்கலையில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் தின வளைவு (video)
வடக்கு - கிழக்கு தாயக பகுதிகள் மற்றும் தமிழர்கள் அதிகம் வாழும் புலம்பெயர் தேசங்களிலும், யுத்தத்தில் தன்னுயிர் ஈந்த மாவீரர்களை நினைவுகூறும் வகையில் மாவீரர் தின நிகழ்வுகள் இன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்தநிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் நினைவேந்தலை முன்னிட்டு தற்காலிகமான வளைவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
மாவீரர்களை நினைவேந்த தயார் நிலையில் தாயகம் : கிழக்கில் வலம் வரும் போலி சுவரொட்டிகள் - சதி நடவடிக்கை அம்பலம்
மாவீரர் வாரம் கடந்த செவ்வாய்கிழமை (21) ஆரம்பமாகிய நிலையில், ஒவ்வொரு நாளும் பல்கலைக்கழகத்தில் நினைவேந்தல் இடம்பெற்று வருகிறது.
இந்தநிலையில் இன்றையதினம், பல்கலைக்கழகத்தில் தற்காலிக வளைவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2004ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த வளைவு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாவீரர் பதாகை
இதேவேளை, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சுற்றுவட்டப் பாதையில் மாவீரர் நாள் பதாகையொன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது..
“எம் மாவீரர்களின் தியாக வரலாறு வீண்போக கூடாது. ஆகவே விழித்தெழு இளம் தலைமுறையே .. போதை வஸ்துக்களில் இருந்தும், வன்முறை சமூகத்தில் இருந்தும் விழித்தெழுந்து, அறிவாயுதத்தை பயன்படுத்து” என அந்த பதாகையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலதிக தகவல்கள் - கஜிந்தன், தீபன்