மூன்று முறை உலகக்கிண்ணம் வென்ற கால்பந்து ஜாம்பவானின் தற்போதைய நிலை! சோகத்தில் ரசிகர்கள்
பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே உடல் நிலை மோசமாக உள்ளதாகவும் இவரது சிறுநீரகம், இருதயம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே, (82 வயது) மூன்று முறை உலகக்கிண்ணம் (1958, 1962, 1970) வென்ற வீரர் ஆவார்.
புற்றுநோய் கட்டி
பிரேசில் அணிக்காக 77 கோல் அடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக 1,363 போட்டிகளில் 1,281 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.
சிறுநீரகத்தில் இருந்த கற்களை அகற்ற சத்திரசிகிச்சை செய்த இவரது, பெருங்குடலின் வலது பக்கத்தில் புற்றுநோய் கட்டி இருந்தமை கண்டறியப்பட்டது. உடனடியாக சத்திரசிகிக்சை செய்து கட்டி அகற்றப்பட்டது.
பின் கோவிட் பாதிப்பு ஏற்பட்டது. இதில் இருந்து மீண்ட பீலே, சமீபத்தில் சாவ் பாலோவில் உள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். புற்றுநோய் சிகிக்கைக்காக இவருக்கு ‘கீமோதெரபி’ சிகிச்சை அளிக்கப்பட்டது.
ரசிகர்கள் பிரார்த்தனை
பின் கோவிட்டின் பிந்தைய பாதிப்புகளால் அவதிப்பட, தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார். பீலே விரைவில் குணமடைய வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் பிரார்த்தனைகள் குவிகின்றன.
இதனிடையே புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து சிறுநீரகம், இருதயம் பாதிக்கப்பட்டுள்ளது. இவரது உடல்நிலை அபாய கட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுகுறித்து மருத்துவமனை தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.