கிளிநொச்சியில் மாற்றுத்திறனாளிகளின் சுயதொழிலை மேம்படுத்துவது தொடர்பான பயிற்சி நெறி
கிளிநொச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் சுயதொழிலை மேம்படுத்துவது தொடர்பான பயிற்சி நெறியொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த பயிற்சி நெறி இன்று (27-05-2025) மாவட்ட சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட திறன் விருத்தி மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
பயிற்சிநெறியில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள்
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் சுயதொழில் உற்பத்திகளை அதிகரித்தல், அவற்றுக்கான தரத்தை உயர்த்துதல், உரிய சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்துதல், அத்துடன் மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இந்த பயிற்சிநெறி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி கண்டாவளை பச்சிலைபள்ளி பூநகரி ஆகிய பிரதேச செயலாளார் பிரிவுகளை சேர்ந்த சுயதொழில் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்ற மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் மற்றும் சவால்கள் தொடர்பிலும் குறிப்பிட்டுள்ளனர்.





அம்பானி உடன் இணையும் சுந்தர் பிச்சை, மார்க் ஜூக்கர்பெர்க்! ரூ.855 கோடிக்கு உருவாகும் புதிய திட்டம் News Lankasri

சத்தமே இல்லாமல் நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்- பிக்பாஸ் பிரபலங்களுக்கு குவியும் வாழ்த்துகள் Manithan

லண்டனில் புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை: பொலிஸார் முகத்தில் குத்திய போராட்டக்காரர்கள்! News Lankasri
