தென்னிலங்கையை உலுக்கிய மரணம் : வைத்தியசாலைக்குள் நடந்த மோசமான சம்பவம்
காலி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு வைத்தியர்கள் சிகிச்சை வழங்காத நிலையில் அவர் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
விபத்தில் காயமடைந்த நிலையில் உயிரிழந்த இளைஞனின் மரணம் தொடர்பான அறிக்கையை, காலி மரண விசாரணை அதிகாரி சந்திரசேன லொக்குகே நேற்று நீதவானுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளார்.
உயிரிழந்தவர் காலி, ஜின்தொட்ட பகுதியை சேர்ந்த 31 வயதான சதுரங்க சந்தருவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஜின்தொட்ட பகுதியில் சுற்றுலா விடுதி நடத்தி வந்த குறித்த இளைஞன், நேற்று முன்தினம் மதியம் மாத்தறையில் இருந்து காலி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது ஹபராதுவ பகுதியில் விபத்துக்குள்ளானார்.
அவசர சிகிச்சை
காயமடைந்த நபர் காலி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவின் 58வது அறையில் அனுமதிக்கப்பட்டார்.
தனது சகோதரர் விபத்தில் சிக்கியதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று முன்தினம் பிற்பகல் 3.30 மணியளவில் தனது தாயாருடன் மருத்துவமனைக்கு வந்தபோது, தனது சகோதரர் ஒரு டிராலியில் கிடப்பதைக் கண்டதாக உயிரிழந்த இளைஞனின் சகோதரி தெரிவித்துள்ளார்.
“நாங்கள் வந்த போது, என் சகோதரனுக்கு வெளிப்புற காயங்கள் எதுவும் தெரியவில்லை. அவர் நன்றாக இருந்தார். ஆனால் அவரது அடிவயிற்றின் கீழ் பகுதி மிகவும் வலிப்பதாக அவர் கூறினார். நாங்கள் இது குறித்து வைத்தியர் மற்றும் தாதிகளிடம் கூறினோம். ஆனால் அவர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை.
என் சகோதரனுக்கு எந்த வலியும் இல்லை என்று அவர்கள் கூறினர். அவர்கள் எக்ஸ்ரே எடுப்பதாக கூறினார்கள். ஆனால் எடுக்கவில்லை. என் சகோதரனால் வலியைத் தாங்க முடியவில்லை, பல சந்தர்ப்பங்களில் அவருக்கு வலி இருப்பதாக மருத்துவமனை ஊழியர்களிடம் கூறினார். ஆனால் யாரும் அவருக்கு சிகிச்சை அளிக்கவில்லை.
இரத்த வாந்தி
என் சகோதரர் நேற்று காலை வரை டிராலியில் இருந்தார். அவர் வலியைத் தாங்க முடியாமல் டிராலியில் இருந்து இறங்கி மருத்துவமனைக்கு வந்த அம்புலன்ஸில் சென்று, எனக்கு எந்த மருந்தும் கொடுக்க மாட்டார்கள் எனவும் என்னை ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் கூறினார்.
அந்த நேரத்தில், மருத்துவமனை ஊழியர்கள் அவரை அம்புலன்ஸில் இருந்து திரும்ப அழைத்துச் சென்று ஒரு நாற்காலியில் உட்கார வைத்தனர். சிறிது நேரத்திற்குப் பிறகு, என் சகோதரர் இரத்த வாந்தி எடுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மருத்துவமனையில் அவருக்கு சரியான சிகிச்சை கிடைக்காததால் இந்த மரணம் நிகழ்ந்தது.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 2 நாட்கள் முன்

வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.., இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? News Lankasri

கூலி திரைப்படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ்.. ரிலீஸுக்கு முன்பே இத்தனை கோடிகள் வந்துவிட்டதா Cineulagam

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு News Lankasri
