வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு விசேட பாதுகாப்பு
ஜனாதிபதித் தேர்தலின்போது தென்னிலங்கையில் வீசிய மாற்றத்துக்கான அலையானது அநுரகுமார திஸாநாயக்கவின் வெற்றிக்கு வித்திட்டிருந்த நிலையில் அதன் சூடு தனியும் முன்னர் இலங்கையில் இன்று நாடாளுமன்ற தேர்தல் நடவடிக்கைகைகள் இடம்பெற்று வருகிறது.
இலங்கை வரலாற்றில் முக்கிய, பழைய பெரிதும் பேசப்பட்ட அரசியல் தலைமைகள் களம்காணாத ஒரு நாடாளுமன்ற தேர்தலாக இன்று (14.11.2024) நடைபெறும் தேர்தல் காணப்படுகிறது.
அந்தவகையில் மாலை 4 மணியுடன் வாக்களிக்கும் பணிகள் இடம்பெற்று முடிந்துள்ளது.
இதற்கமைய தற்போது வாக்கெண்ணும் நிலையங்களின் பாதுகாப்பானது தீவிரமாக பலப்படுத்தப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் சிவசுப்ரமணியம் அச்சுதன் தெரிவித்துள்ளார்.
மேலும், வாக்கெண்ணும் நிலையங்களுக்கு கட்சி ரீதியாகவோ, சுயேச்சை குழு ரீதியாகவோ அரசியல் பிரமுகர்களுக்கோ எவ்வித அனுமதியும் வழங்கப்படாது என அவர் விளக்கமளித்துள்ளார்.
இந்நிலையில் இலங்கையின் அடுத்த அரசாங்கத்தை அமைக்க மக்களின் ஆணை முடிவுகளை நேர்த்தியாக வெளிப்படுத்த அரசால் வகுக்கப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பில் முழுமையாக அறிந்துகொள்ள லங்காசிறி ஊடகம் வழங்கும் சிறப்பு நேர்காணல் இதோ...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
எதிர்பார்க்காத போட்டியாளர் பிக் பாஸ் 9 வீட்டிலிருந்து வெளியேற்றம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan