விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை: 372 பேர் கைது
நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 372 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம் (13) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது நடவடிக்கை
இதன்போது, ஹெரோயின் போதைப்பொருளுடன் 110 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 138 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 124 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 132 கிராம் 376 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 236 கிராம் 404 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், 92 கிலோ 200 கிராம் 783 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



