யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு அலுவலகம் திறப்பு
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த அலுவலகம் இன்று(14) மாவட்ட செயலகத்தில் கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நியமனக் கடிதம்
இந்த நிகழ்வில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தின் இணைப்பாளராக சுந்தரமூர்த்தி கபிலனுக்கு நியமனக் கடிதம் அமைச்சரால் வழங்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன், அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க.ஸ்ரீமோகனன், திட்டமிடல் பணிப்பாளர் இ சுரேந்திரநாதன், பிரதம கணக்காளர் எஸ் கிருபாகரன், உத்தியோகத்தர் கள் உள்ளிட்டோர் பங்குபற்றினார்கள்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam