பேராதனையில் விசேட சோதனை : 6 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது
பேராதனை, கொரகாதெனிய பகுதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, 6 கிலோகிராமுக்கும் அதிக எடையுடைய கஞ்சா போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேராதனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொரகாதெனிய பகுதியில் நேற்றுமுன்தினம்(02.06.2026) பேராதனை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் குழுவினால் இந்த விசேட சோதனையொன்று முன்னெடுக்கப்பட்டது.
தொடர்பான மேலதிக விசாரணை
இதன்போது, 6 கிலோகிராம் 100 கிராம் கஞ்சா போதைப்பொருளைத் தனது வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழேயே மேற்படி சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான நபர் கொரகாதெனிய பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட கஞ்சா போதைப்பொருள் என்பன நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பேராதனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மகளுக்கு திருமணம்... முதலமைச்சர் விஜயை குடும்பத்துடன் சென்று அழைத்த குஷ்பு - படு வைரலாகும் புகைப்படங்கள் Manithan
சொந்த நட்சத்திரத்தில் ராகு பெயர்ச்சி... நிதி நிலையில் எதிர்பாராத அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! Manithan