மட்டக்களப்பில் பொலிஸாரினால் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுப்பு
பயணக்கட்டுப்பாட்டை மீறுவோரை கண்டறியும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொலிஸாரினால் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இன்று மாலை மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொலிஸாரினால் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கோவிட் தொற்று தீவிரமாக பரவிவரும் நிலையில் பயணக்கட்டுப்பாடுகளை மீறும் வகையில் பலர் செயற்பட்டு வரும் நிலையில் பொலிஸாரினால் இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது கூழாவடி பகுதியில் விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வர்த்தக நிலையமொன்று பொலிஸாரினால் பூட்டப்பட்டதுடன் ,அந்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவும் நடவடிக்கையெடுக்கப்பட்டது.
இதேபோன்று பயணத்தடையினையும் மீறி பயணம் மேற்கொண்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்கான நடவடிக்கையும் பொலிஸாரினால் எடுக்கப்பட்டது.
அத்துடன் பயணத்தடை காலத்தில் பயணம் மேற்கொள்வதற்கு வழங்கப்பட்ட அனுமதியை தவறான முறையில் பயன்படுத்துவோரும் இதன்போது இனங்காணப்பட்டு கடுமையாக எச்சரிக்கைகள் வழங்கப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.










16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
